புதுடில்லி: ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு பேரணி நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜன.,31 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
![]()
|
வரும் பிப்ரவரி மாதம் 10 ம் தேதி முதல் கோவா, பஞ்சாப், உ.பி., உத்தரண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உ.பி., மாநிலத்திற்கு மட்டும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடரந்து வாக்கு எண்ணும் பணி மார்ச்.,10 ம் தேதி நடைபெற உள்ளது.
![]()
|
நாடு முழுவதும் கொரோனா பரவலை அடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களில் சுமார் 500 பேர் வரையில் பங்கேற்கலாம். மேலும் அனைத்து கட்சிகளும் வரும் 22 ம் தேதி வரை பேரணி நடத்த தடை விதித்தது. இந்நிலையில் பேரணி நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையை வரும் 31 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதே நேரத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தற்போது 10 ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது தேர்தல் ஆணையம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement