மதம் மாற கட்டாய படுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது
பெரம்பலூர்:மதம் மாற கட்டாய படுத்தியதால்தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் சொந்த ஊரில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா(17), தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி லாவண்யாவை பள்ளி நிர்வாகம் மதம் மாற கட்டாயப்படுத்திய தாகவும் இதற்கு மறுத்த அவரை விடுதி வார்டன் சகாயமேரி, 62, அறைகளை செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்து கடந்த 15ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்தார்.
புகாரின் பேரில் விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். கடந்த 19 ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி லாவண்யா இறந்தார்.இதைத்தொடர்ந்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 3 நாள்களுக்கு பிறகு சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்ய உத்தர விட்டது. இதையடுத்து மாணவியின் உடல் அவரது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் மாலை அவரது சொந்த ஊரான வடுகபாளையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட பார்வையாளர் அய்யாரப்பன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் சேதுராமன், மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்திய சுந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் மற்றும் கிராம மக்கள் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து கிராமத்தில் உள்ள மயானத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே வடுகபாளையம் கிராமத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான காவல் துறையினர் பதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE