மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு மகிழ்ச்சி

Added : ஜன 22, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறையில், இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும் பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் கடந்தாண்டு பிப்., மாதம் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில்

கிருஷ்ணகிரி: மயிலாடும்பாறையில், இரண்டாம் கட்ட அகழாய்வுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும் பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என, 10 இடங்களில் கடந்தாண்டு பிப்., மாதம் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா ஆகியோர் அகழாய்வு மேற்கொண்டு, பல தொன்மையான வரலாற்று சின்னங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது மயிலாடும்பாறையில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இப்பணிகள் பிப்., முதல் வாரத்தில் துவங்கி செப்., இறுதி வரை நடக்க உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய துணை கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் துவங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப் படையில், அறிவியல் பூர்வமாக நிறுவு வதற்கு, இந்த அகழாய்வுகள் உறுதி செய்யும் என, வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X