வேலூரில் எருது விடும் விழாக்கள்:தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Added : ஜன 22, 2022
Advertisement
வேலுார்:வேலுார் மாவட்டத்தில், எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எருது விடும் விழாக்கள் நடத்துவது குறித்து அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை வேலுார் மாவட்டத்தில் விழா நடத்துபவர்கள் கடைபிடிக்க

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: எருது விடும் விழாக்கள் நடத்துவது குறித்து அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளை வேலுார் மாவட்டத்தில் விழா நடத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அளவுக்கதிமான கூட்டம், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விழா நடந்து வருவதால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக புகார்கள் வந்தன. கடந்த 15 ம் தேதி முதல் 22 ல் வரை நடந்த எழுது விடும் விழாக்களை ஆய்வு செய்ததில், அரசு தெரிவித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள், கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.எனவே வேலுார் மாவட்டத்தில், எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எருது விடும் விழாக்கள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X