சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தெகை (டெபாசிட்) இரண்டு மடங்காக உயர்த்தி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது
மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
![]()
|
அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஓட்டுசாவடிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சி பெயரில் சுவரொட்டிகள் ஒட்ட தடை
![]()
|
டெபாசிட் தொகை அதிகரிப்பு
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தெகை (டெபாசிட்) இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000 நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ.1,000 என காப்புத்தொகையாக நிர்ணயித்துள்ளது.மேலும் பட்டியலினத்தினர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE