தமிழகத்தில் பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை: ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (12)
Advertisement
சென்னை:'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், 'கோவையில், டாக்டர் பாலசுந்தரம்சாலை - அவினாசி சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை:'உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.latest tamil news
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், 'கோவையில், டாக்டர் பாலசுந்தரம்சாலை - அவினாசி சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற வேண்டும்.'தமிழகம் முழுதும், அரசின் ஒப்புதல் இன்றி நிறுவப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.


சுற்றறிக்கை


இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021 அக்டோபரில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சிலைகள் விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருப்பது பற்றியும், தலைமைச் செயலர் அறிக்கை அளிக்கும்படி தெரிவித்திருந்தது.இதையடுத்து, இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.
அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் அனிதா ஆஜராகி, இவ்வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க கோரினார்.அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.இவ்வழக்கில், அரசு தலைமைச் செயலர் இறையன்பு தாக்கல் செய்த மனு:
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, 'நோடல்' துறையாக வருவாய் துறையை அரசு நியமித்து உள்ளது.அதன்படி, சிலைகள் நிறுவ அனுமதி கோரிய விண்ணப்பங்களை, மாவட்ட கலெக்டர் அனுப்பும் போது, அவற்றை ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை பரிசீலித்து, வருவாய் துறைக்கு பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.முதல்வரின் உத்தரவு பெற்ற பின், வருவாய் துறை இறுதி உத்தரவு பிறப்பிக்கும்.
பொதுவான சாலை, நடைபாதை, பக்கசாலை, பொது பயன்பாட்டு இடங்களில் சிலைகள் நிறுவ, எந்த கட்டமைப்பும் மேற்கொள்ள, மாநில அரசு அனுமதி அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வருவாய் நிர்வாக கமிஷனர், 2019 மார்ச்சில், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


latest tamil newsசிலை நிறுவப்படும் இடம், பட்டா நிலம் தான் என்பதையும், அரசு புறம்போக்கு நிலம், சாலை, நெடுஞ்சாலை, நீர் நிலை, புராதன இடம், நினைவு சின்னம், அடித்தட்டு பிரிவினருக்கான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என்பதற்கும், தாசில்தார் சான்றிதழ் அளிக்க வேண்டும்.இடத்தின் உரிமையாளரிடம் இருந்து பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், வரைபடம், சர்வே எண் விபரங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சிலை நிறுவப்படும் இடம், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தில், நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரவில்லை என்பதை உறுதி செய்ய, சப் - -கலெக்டர் அல்லது வருவாய் கோட்ட அதிகாரி ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும்.மாவட்ட வருவாய் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்பதற்கு, எஸ்.பி.,யிடம் அறிக்கை பெற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து அறிக்கை; வாகன போக்குவரத்து, பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என நெடுஞ்சாலைத் துறையிடம் அறிக்கை பெறப்பட வேண்டும்.


உத்தரவாதம்


அரசு நிலம், பொதுவான சாலை, நடைபாதை, பொது பயன்பாட்டு இடங்களில் சிலை நிறுவ அல்லது கட்டமைப்பு மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி, மாவட்ட கலெக்டர்கள்எந்த பரிந்துரையும் அனுப்பக் கூடாது.தனிப்பட்ட நபர், அமைப்பு, அறக்கட்டளை, சங்கம், சிலை வைக்க அனுமதி கோரும் போது, அவர்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் பெற வேண்டும்.வெண்கல சிலையாக இருக்க வேண்டும்; செலவை ஏற்பாட்டாளர் ஏற்க வேண்டும்; பராமரிப்பு செலவையும் ஏற்க வேண்டும் என உத்தரவாதம் பெற வேண்டும்.
சிலையை மாற்றி அமைக்கும் தேவை இருந்தால், அதற்கான மனுவையும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலெக்டர் பெற வேண்டும்.எனவே, சிலை நிறுவ அனுமதி வழங்குவதற்கு முன், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி அமைப்பின் அனுமதி, நெடுஞ்சாலை துறை ஒப்புதல், உச்ச நீதிமன்ற உத்தரவு என அனைத்தையும் அரசு பரிசீலிக்கிறது.உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, பொது இடங்களில் சிலைகள் நிறுவ அரசு அனுமதி வழங்கப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202216:10:02 IST Report Abuse
ஆரூர் ரங் அந்த தாடிக்கார கிழவன் சிலை😛 வேண்டவே வேண்டாம். சிறு பிள்ளைகள் அதனைப் பார்த்து பயந்து அலறுவது கஷ்டமா இருக்கு
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜன-202208:25:26 IST Report Abuse
Sriram V Everyone knows that it's not being implemented. We should father evidence and file a case against officials for filing false affidavit.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202208:05:51 IST Report Abuse
Mani . V ஏற்கனவே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளையும், சமாதிகளையும் (மெரினா) அப்புறப்படுத்த உத்தரவிட்டால் சிறப்பாக இருக்கும். அவுங்க அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X