இஸ்லாமாபாத்-பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சீன தொழிலாளர்களுக்கு 86 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, நம் அண்டை நாடான பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், சீனா இடையே மிகவும் நெருக்கமான நட்புறவு உள்ளது. பாகிஸ்தானில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சீனா செய்து வருகிறது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், உலக வங்கி உதவியுடன் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் சீன நிறுவனம் ஈடுபட்டுள்ளது.கடந்தாண்டு சீன ஊழியர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தினர்.
இதில் 10 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த சீன ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை பணிகளை நிறுத்தி வைப்பதாக, அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இழப்பீடு வழங்குவதாக பாக்., அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து நடந்த பாக்., அரசின் பொருளாதார ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 86 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடும் நிதி நெருக்கடியிலும், நல்லெண்ண அடிப்படையில் நட்புறவை மதித்து இந்தத் தொகையை வழங்குவதாக பாக்., அறிவித்துள்ளது. வழக்கமாக சீனாவில் இதுபோன்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிகம் வழங்க பாக்., முன்வந்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement