வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிரிபாட்டி, சமோவா: கொரோனா என்றால் என்னவென்றே தெரியாத பசிபிக் சிறு தீவுகளையும் ஒமைக்ரான் விட்டுவைக்காமல் தாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் வடக்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள சிறிய தீவு நாடுகள் சிலவற்றில் வைரஸ் தாக்கம் அறவே இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம். இதுபோன்ற சிறிய தீவுகளில் மக்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதாலும் பெரிய நாடுகளுடன் அதிக தொடர்பு இல்லாமல் சிறிய அளவில் வர்த்தகம் மேற்கொண்டு குடிமக்கள் வாழ்வாதாரத்தை தேடுவதாலும் வைரஸ் தாக்கத்திலிருந்து இவர்கள் தப்பி விடுகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அருகில் வட பசிபிக் கடற்பரப்பில் உள்ள கிரிபாட்டி, சமோவா ஆகிய இரண்டு சிறிய தீவு நாடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தாக்கம் இல்லாமல் கொரோனா என்றால் என்னவென்றே தெரியாமல் பெரும்பாலான குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில்இந்த இரண்டு சிறிய தீவு நாடுகளிலும் தற்போது இருவர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து முக்கிய வர்த்தக தொடர்பு தவிர கப்பல், விமானம் மூலம் பெரிய நாடுகளுடன் இந்த சிறிய தீவு நாடுகள் தொடர்பை துண்டித்துள்ளன. மேலும் தங்களது குடிமக்களுக்கு வீடு வீடாகச் சென்று வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு உள்ளன.
குறிப்பாக ஃபிஜி தீவுகளில் இருந்து விமானம் மூலமாக கிரிபாட்டி, சமோவா தீவுகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மூலமாக வைரஸ் பரவி உள்ளதாக அந்நாட்டு மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சுகாதாரத் துறையின் பரிசோதனை முடியும்வரை இந்த தீவு நாடுகளின் குடிமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE