மும்பை-பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதிக்கு வாடகை தாய் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துஉள்ளது.
நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா, 39. அதன் பின் ஹிந்தி படங்களில் பிரபலமான நடிகையான அவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகப் புகழ் பெற்றார். இவர் தன்னை விட, 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை காதலித்து 2018ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு தற்போது வாடகை தாய் வாயிலாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதை சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ள பிரியங்கா, 'இந்த இனிமையான தருணத்தில் குடும்பத்தை கவனிக்க வேண்டியுள்ளதால் எங்கள் தனிமைக்கு மதிப்பளியுங்கள்' என, ரசிகர்களுக்கு கூறியுள்ளார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறும் நடைமுறையில், கணவரிடம் இருந்து விந்தணு எடுக்கப்பட்டு, வாடகை தாயின் கர்ப்பப் பையில் வைக்கப்படும். சிசு உருவாகி, வளர்ந்து பிரசவித்த பின் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும். இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர், வாடகை தாய்க்கு பெருந் தொகை கொடுத்து, குழந்தை பேறு காலம் வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வர்.குழந்தை பெறுவதில் பிரச்னை உள்ள பெண்கள், இந்த வாடகைத் தாய் உதவியை நாடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE