போலி ஆதார் அட்டை தொடர்பான தகவல் வழங்க ஐகோர்ட் உத்தரவு

Added : ஜன 22, 2022 | கருத்துகள் (1)
Advertisement
புதுடில்லி-'டில்லியில் அரசு போக்குவரத்து பணிக்காக போலி ஆதார் அட்டை வாங்கியோர் குறித்த தகவல்களை விசாரணை அமைப்பிற்கு வழங்க வேண்டும்' என, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இம்மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பாதுகாவலர் பணிக்கான ஆட்கள் சேர்க்கை
போலி ஆதார் அட்டை தொடர்பான தகவல் வழங்க ஐகோர்ட் உத்தரவு

புதுடில்லி-'டில்லியில் அரசு போக்குவரத்து பணிக்காக போலி ஆதார் அட்டை வாங்கியோர் குறித்த தகவல்களை விசாரணை அமைப்பிற்கு வழங்க வேண்டும்' என, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இம்மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பாதுகாவலர் பணிக்கான ஆட்கள் சேர்க்கை 2020ல் நடந்தது.டில்லியில் வசிப்போருக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும் என விதிகள் கூறின. அப்போதைய கலெக்டர், தன் மாநிலமான ராஜஸ்தானை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோரை பணியில் சேர்க்க விரும்பியுள்ளார்.இதற்காக அவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு டில்லியில் வசிப்பவர்கள் என போலி இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

அதன் உதவியுடன், கலெக்டர் அலுவலக ஆதார் மையத்தில் அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி விடுமுறை நாட்களில் நடந்துள்ளது.இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலி ஆதார் அட்டை பெற்ற 400க்கும் மேற்பட்டவர்களின் விபரங்களை வழங்க ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, மாநில அரசு தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஆனது.

விசாரணை முடிவில், டில்லி அரசு கோரிய நபர்கள் குறித்த ஆதார் விபரங்களை முழுமையாக வழங்க வேண்டும் என, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
23-ஜன-202208:12:28 IST Report Abuse
duruvasar அட்டைக்கு 2 லட்சம். கெஜ்ரிவால் ஆளும் மாநிலத்தில் இப்படியொரு பிச்சைக்கார கலெக்டர். இவர் மேல் கெஜ்ரிவால் மானனநஷ்ட வழக்கு தொடரவேண்டும்‌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X