சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கிடைக்காத பதவிக்கு அடிதடி!

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 22, 2022 | |
Advertisement
'அடுத்து ஆட்சிக்கு வருவோமா, இல்லையா என உறுதியாக தெரியவில்லை; அதற்குள் முதல்வர் பதவிக்கு இவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை...' என, புலம்புகின்றனர், பஞ்சாப் மாநில காங்., நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி விட்ட நிலையில், ஆளும் கட்சியான காங்கிரசில்
 அக்கம் பக்கம்

'அடுத்து ஆட்சிக்கு வருவோமா, இல்லையா என உறுதியாக தெரியவில்லை; அதற்குள் முதல்வர் பதவிக்கு இவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை...' என, புலம்புகின்றனர், பஞ்சாப் மாநில காங்., நிர்வாகிகள்.

இங்கு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி விட்ட நிலையில், ஆளும் கட்சியான காங்கிரசில் பெரும் கலாட்டாவே நடக்கிறது. முதல்வர் பதவியிலிருந்து ஏற்கனவே அமரீந்தர் சிங்கை காலி செய்த, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். 'ஆட்சியை தக்க வைத்தால், அடுத்த முதல்வர் நான் தான்' என, அவர் கூறி வருகிறார்.

அமரீந்தருக்கு பதிலாக சரண்ஜித் சிங்கை முதல்வராக பரிந்துரைத்தவரும் சித்து தான். 'நான் சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்துவார், சரண்ஜித்' என, சித்து கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், சித்துவை எகிறி அடிக்கத் துவங்கி விட்டார், சரண்ஜித். இதனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

'சித்து, அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் பிரபலமானவர். அவருடன் உங்களால் போட்டி போட முடியாது' என, சரண்ஜித்திடம் பலரும் கூறினர்.சரண்ஜித்தோ, 'நான் சாதாரண மக்களிடம் நெருங்கி பழகும் அரசியல்வாதி. என்னுடன் சித்து போட்டியிட முடியாது' என, உறுதியாக சொல்கிறார். பஞ்சாப் மக்களோ, 'கிடைக்காத பதவிக்கு இவ்வளவு அடிதடியா...' என, கிண்டலடிக்கின்றனர்.


கண்ணீர் வடிக்கும் கவர்னர்!



'அடிக்கடி கட்சி தாவினால் இப்படித் தான் அவஸ்தைப் பட வேண்டியிருக்கும்...' என, கேரள கவர்னர் ஆரீப் முகமது கானை கிண்டலடிக்கின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள். இங்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆரீப் முகமது கான், பழுத்த அரசியல்வாதி; உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
காங்கிரஸ், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் அங்கம் வகித்தவர். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சராகவும் இருந்த அனுபவம் இவருக்கு உண்டு. நரேந்திர மோடி பிரதமரானதும், பா.ஜ.,வில் ஐக்கியமானார், ஆரீப் முகமது கான். இதற்காக கேரள கவர்னர் பதவி இவருக்கு பரிசாக கிடைத்தது; ஆனால், இங்கு அவருக்கு பெரும் சோதனைகள் வரிசை கட்டி வருகின்றன.
பல்கலைக்கழக விவகாரங்களில் கவர்னர் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி, கேரள எதிர்க்கட்சியான, காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டங்கள் நடக்கின்றன.கேரள மாநில பா.ஜ., வினரோ, 'கவர்னர் பதவிக்கு இவர் லாயக்கு இல்லை; வேறு ஒருவரை நியமித்தால் நல்லது' என, கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர். 'ஏற்கனவே நாம் அங்கம் வகித்த காங்., கட்சியினர் தான் நம்மை ஆதரிக்கவில்லை என்றால், பா.ஜ.,வினரும் எதிர்க்கின்றனரே...' என, கண்ணீர் வடிக்கிறார், ஆரீப் முகமது கான்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X