தடுப்பூசி போடாமல் சான்றிதழ் சிக்கினால் கடும் நடவடிக்கை

Added : ஜன 22, 2022 | |
Advertisement
சென்னை-''தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய கொரோனா பரிசோதனை ஆய்வக வாகனத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை-''தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், ஐ.ஐ.டி., மாணவர்கள் உருவாக்கிய கொரோனா பரிசோதனை ஆய்வக வாகனத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.மெகா தடுப்பூசி முகாம்கள்பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

மாநிலம் முழுதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், 121 நகராட்சிகளில், 23 நகராட்சிகளில், 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 94.19 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 74.11 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் போடப்பட்டுள்ளது.கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதே, கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. தடுப்பூசி செலுத்தியுள்ளதால், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இறப்பு விகிதத்தை குறைக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாமலே போட்டதாக சான்றிதழ் எடுத்துக் கொள்பவர்களை, அடையாளம் காண்பது சற்று கடினமான ஒன்று.ஆனால், மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதால் தான், தடுப்பூசி முகாமை அரசு நடத்துகிறது.

மேலும், ஒரு தடுப்பூசியின் விலை 1,100 ரூபாய் என்ற நிலையில், மக்களை காப்பாற்றுவதற்காக அரசு இலவசமாக வழங்கி வருகிறது.போலி சான்றிதழ்எனவே, தடுப்பூசிக்கு போலி சான்றிதழ் கொடுக்க வேண்டாம்; வாங்க வேண்டாம். இதுபோன்று போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் பாதிப்பு இரண்டு நாட்களாக குறைந்து வந்தாலும், உள்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குனர் காமகோடி, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X