சென்னை-'குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் வாகனம் தேர்வாகாததற்கு மத்திய அரசை குறை சொல்வது, ஸ்டாலினின் அறியாமையை காட்டுகிறது; தத்துவம் மட்டுமே பேசி, தமிழகத்தை ஏமாற்றிட முடியாது' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஐந்து முறை தமிழகத்தை தி.மு.க., ஆண்ட போதும், முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்கு முதுகெலும்பாக தி.மு.க., திகழ்ந்த போதும், குடியரசு அணிவகுப்பில் தி.மு.க., அரசு பங்கேற்ற விபரத்தை, ஸ்டாலின் வெளியிட வேண்டும்.தகுதி சுற்றில் வெற்றி பெற திறனுள்ள அதிகாரிகள் இல்லை. தமிழக அரசுக்கு அருகதையில்லை. எனவே தமிழகம் நீக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன தவறு. இதிலும் விதிவிலக்கு, இட ஒதுக்கீடு, சமூக நீதி தேவை என்கிறாரா ஸ்டாலின்?தமிழகம், போட்டி தேர்தவில் பின்தங்கியதற்கு திறன் இல்லாத நிர்வாகமும் அரசுமே காரணம். ஏதோ மத்திய அரசு திட்டமிட்டு, அலங்கார ஊர்திகளை நீக்கியதாக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு எழுதிய ஊர்திகள் தொடர்பான கடிதத்தில் விஷமத்தனமான கருத்துகளையும், இன உணர்வை துாண்டுகிற வன்மத்தையும், பிரிவினை உணர்வை கிளறி விடுகிற வக்கிரத்தமான போக்கிலும் விஷத்தை கக்கியிருந்தார்.உலக அரங்கில், இந்தியா உச்சத்தில் ஒளிவிட்டு மிளிர்கிறது. உலக தலைவர்களில், 'நம்பர் ஒன்' பிரதமராக, தலைவராக, நம் தேச தந்தையாக பிரதமர் மோடி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். பொறாமை, வஞ்சகம், காழ்ப்பு, பொச்சரிப்பு என, இழிவான மானம் கொண்டோர் கடுகை கடலாக்குகின்றனர்; துரும்பை துாணாக்குகின்றனர். எறும்புகள் கூடி இமயமலையை வீழ்த்த முடியாது. தத்துவம் மட்டுமே பேசி தமிழகத்தை ஏமாற்ற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement