சென்னை-ஆட்டோ ஓட்டுனர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சட்டம் - ஒழுங்கை மீறுபவர்களாகவும், நம் நாளிதழ் சித்தரிப்பதாக கூறி, தி.மு.க., - கம்யூனிஸ்ட், காங்., உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கத்தினர், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில், 75 சதவீதத்திற்கும் மேலான ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மதுபோதையில் ஆட்டோக்களை இயக்குவது, பயணியரிடம் அநாகரிகமாக பேசுவது என, அட்டூழியம் செய்து வருகின்றனர். போக்குவரத்து விதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
14 தொழிற்சங்கத்தினர்போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளும், ஒரு நாள் கூத்து போல, அபராதம் விதிப்பது, ஆட்டோக்களை பறிமுதல் செய்வது என, நடவடிக்கை எடுத்ததாக கணக்கு காட்டி, கடமையை முடித்துக் கொண்டனர்.இதுகுறித்தும், ஆட்டோ ஓட்டுனர்களின் அட்டகாசம் தொடர்வது குறித்தும், நம் நாளிதழில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 'ஆட்டோ ஓட்டுனர்களை, 'தினமலர்' நாளிதழ் அவதுாறாக சித்தரிக்கிறது. அவர்கள் ஒழுங்கீனமானவர்கள், சட்டம் - ஒழுங்கை மீறுபவர்கள் என அவதுாறு பரப்புகிறது' எனக்கூறி, தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - காங்., கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட 14 தொழிற்சங்கத்தினர், நேற்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 10:30க்கு துவங்கிய ஆர்ப்பாட்டம், 10:58 மணி வரை 28 நிமிடங்கள் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், நம் நாளிதழுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். எந்தெந்த சங்கங்கள்? தொ.மு.ச., - சி.ஐ.டி.யூ., - ஏ.ஐ.டி.யூ.சி., - ஐ.என்.டி.யூ.சி., - ஹெ.எம்.சி., - இனோடா, எம்.எல்.எப்., - எல்.எல்.எப்., - பாட்டாளி தொழிற் சங்கம், தே.மு.தொ.ச., - உரிமை குரல் - எஸ்.டி.டி.யூ., - குட்வில், ஏ.ஏ.டி.யூ., என, 14 சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ., மாநில துணை பொதுச்செயலர் குமார், அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக விரோதிகளா?ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அண்ணா சாலை ஓரமாக ஆட்டோக்களை நீண்ட வரிசையில் நிறுத்தி இருந்தனர்.
தொ.மு.ச., பொருளாளர் நடராஜன் அளித்த பேட்டி:ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும், சமூக விரோதிகள் போல செயல்படுவதாக சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது அல்ல.ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். பயணியரை வக்கிர புத்தியுடன் பார்க்கின்றனர் என, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகிறது
.பத்திரிகை தர்மத்தை உணர்ந்து அந்த நாளிதழ் செயல்பட வேண்டும். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவல் துறையினர், 'தினமலர்' நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 'தினமலர்' நாளிதழ் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்து, மேலும் அவதுாறு செய்திகளை வெளியிட்டால், அதன் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவது பற்றி அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பேசி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE