சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 23, 2022
Advertisement
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி: உ.பி., சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. அதற்காக, நாங்கள் விலகி நிற்கிறோம் என்ற அர்த்தமில்லை. ஜாதி,- மதமற்ற மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்புகிறோம்.எந்த கட்சியும், காங்கிரசை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை; அது தான் உண்மை. அதை வெளியே சொல்வீர்களா என்ன...தமிழக வருவாய் துறை
 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி: உ.பி., சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. அதற்காக, நாங்கள் விலகி நிற்கிறோம் என்ற அர்த்தமில்லை. ஜாதி,- மதமற்ற மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்புகிறோம்.எந்த கட்சியும், காங்கிரசை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை; அது தான் உண்மை. அதை வெளியே சொல்வீர்களா என்ன...
தமிழக வருவாய் துறை அமைச்சர் தியாகராஜன் அறிக்கை: எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அவற்றுடன், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியையும் சேர்த்து கவனிப்பது கடினமாக இருந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகி விட்டேன். பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது என் இயல்பு அல்ல.உங்களுக்கு இந்த ஞானோதயம், எட்டு மாதங்கள் கழித்து வந்தது ஏன்... உங்களிடம் இருந்து, அந்த பதவி பறிக்கப்பட்டது என்றல்லவா கூறுகின்றனர்!
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷன் அறிக்கை: கொரோனா தொற்று ஏற்பட்டோரில், 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசியை விட சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. எனினும், ஆரோக்கியமாக இருப்பவர்களை திரும்பவும் தடுப்பூசி போடச் சொல்வது ஏன்... மேலும், தொற்று பரவலை, தடுப்பூசி தடுக்காதது ஏன்?கொரோனா தடுப்பூசிக்கு எதிராக, 'வியாக்கியானம்' செய்பவர்களை பிடித்து, 'உள்ளே' போட, சட்டத்தில் இடமில்லையா என்ற சந்தேகம், உங்களால் பலருக்கும் வருகிறதே!
மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி அறிக்கை: சர்வதேச அமைப்பு ஒன்று, உலக நாடுகளின் தலைவர்களை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள தர மதிப்பீட்டில், பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இது, நாட்டு மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.கொஞ்சம் பொறுத்திருங்கள்... இன்னும் சில நாட்களில், இன்னொரு சர்வதேச அமைப்பு, 'உலகின் மோசமான பிரதமர் மோடி' என்று கூறும்... இவர்களின் மதிப்பீடுகளை விட, மக்களின் மதிப்பீடு தான் அவசியம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: இந்திய ஆட்சிப் பணி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தம், மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. எனவே, ஆபத்தான அந்த திருத்தத்தை உடனடியாக கைவிடுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறோம். தமிழக ஜனநாயக சக்திகள் இதற்காக குரல் எழுப்ப வேண்டும்.மாநில அதிகாரம் பறிப்பு என சொல்லி, எதையாவது கொளுத்தி போடுவதையே, கடந்த எட்டு மாதங்களாக வழக்கமாக கொண்டுள்ளீர்கள். அதற்கு முன், எதற்கு எடுத்தாலும், அ.தி.மு.க., அரசை வசை பாடினீர்கள்... ஆரோக்கிய அரசியலுக்கு வாங்க சார்!
அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி: ஊழலுக்கு வித்திட்டவர்களே, தி.மு.க.,வினரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தான். எனவே, ஊழலை பற்றி பேச, அக்கட்சிக்கு அருகதை கிடையாது. லஞ்ச ஒழிப்பு சோதனை என்ற பெயரில், அ.தி.மு.க.,வினரை அடக்க நினைத்தால், அவர்களை போன்ற ஏமாளிகள் யாரும் இருக்க முடியாது.தி.மு.க., அரசு கொடுத்த, 'ஆர்டர்' பிரகாரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், முறை வைத்து, அ.தி.மு.க., பிரமுகர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் நீங்களும் தப்ப மாட்டீர்களோ?
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி: பொங்கல் விழாவின் போது, தமிழக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டதால், பயணியர் யாருக்கும் இடையூறு இல்லை; எந்த புகாரும் இல்லை. பொது முடக்கத்தின் போது அதிகாரிகளை வைத்து, பஸ்களை சரியாக அனுப்பியதால் மக்கள் நிம்மதியாக பயணித்தனர்.இதுபோல, எல்லா விதங்களிலும் சரியாக செயல்படுவது தான், அமைச்சகங்களின் வேலை. அதற்காகத் தான் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம்... இதில், நீங்களாகவே பெருமைப்பட்டுக் கொள்ள ஒன்றுமில்லையே!த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் பேட்டி: கொரோனா மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள், அரசு கூட்டு முயற்சியால் தான் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். எனவே, டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்.முதலில் சொன்ன மூன்று அம்சங்களும், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியது; செய்து வருகின்றனர். நான்காவது சொன்னீர்கள் பாருங்கள்... அது, தமிழக அரசு செய்ய வேண்டியது; செய்ய மறுக்கிறதே!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி: ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளதால், சனிக்கிழமைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக கடைகளுக்கு வருகின்றனர். இதை தவிர்க்க, ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்.ஊரடங்கு இல்லாமல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசு ஆராய வேண்டும் என்ற குரல் பல மாநிலங்களில் ஒலித்து வருகிறதே!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: கள் உற்பத்தியை கள்ளச்சாராயத்துடன் தொடர்புபடுத்தி, அவதுாறு பரப்புவதுடன், பனைகளில் ஏறி, கள் இறக்குபவர்கள் மீது எரிசாராயம் வைத்திருந்ததாக, பொய் வழக்கும் புனையப்படுகிறது. இதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்.கள் இறக்க தடை இருக்கும் போது, எதற்காக கள் இறக்குகின்றனர்... அதனால் தான், எரி சாராய வழக்கு பாய்கிறதோ?


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X