சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பொருந்தா உணவால் எம்.ஜி.ஆரை இழந்தோம்!

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி: நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் கடை இருந்ததால், காலையில் இட்லி சாப்பிடுவேன். ஆனால், அம்மா வற்புறுத்தி பழையது சாப்பிட சொல்வார். வெங்காயம் அல்லது மிளகாயோடு கம்மஞ்சோறு, கேழ்வரகு களி அல்லது எங்க ஊரில் புளிச்ச தண்ணின்னு சொல்லும் நீராகாரம் தான் காலை உணவு.சென்னை வந்ததும், எல்லாமே மாறிப் போனது. ஒரு கட்டத்தில் உடல்
 சொல்கிறார்கள்



சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி: நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் கடை இருந்ததால், காலையில் இட்லி சாப்பிடுவேன். ஆனால், அம்மா வற்புறுத்தி பழையது சாப்பிட சொல்வார். வெங்காயம் அல்லது மிளகாயோடு கம்மஞ்சோறு, கேழ்வரகு களி அல்லது எங்க ஊரில் புளிச்ச தண்ணின்னு சொல்லும் நீராகாரம் தான் காலை உணவு.
சென்னை வந்ததும், எல்லாமே மாறிப் போனது. ஒரு கட்டத்தில் உடல் சோர்வு, ஏதோ ஓர் அசதி என்னை சுறுசுறுப்பாக இயங்கவிடாமல் செய்தது.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மரணம், கடுமையான அதிர்ச்சி தந்தது. அவர் 100 வயது வரை இருப்பார் என்ற அதிதீவிர நம்பிக்கையில் இருந்தவர்களில் நானும் ஒருவன்; ஆனால், அது பொய்யாகி விட்டது. எல்லாவற்றிலும் சரியாக இருந்த அவர், உணவு விஷயத்தில் குறிப்பாக, உடலுக்கு பொருந்திய உணவு, பொருந்தாத உணவு என்ற பாகுபாடு பார்த்து, உண்ணுவதில் சரியாக கவனம் செலுத்தாதது தான், அவர் மரணத்திற்கான அடிப்படை காரணம் என்று தெரிந்தது.
அதன் பின் தான், என் உடல்நிலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். கந்தசாமி முதலியார் என்பவர் எழுதிய, 'உணவே மருந்து' என்ற புத்தகத்தை படித்ததற்கு பின் தான், உணவு விஷயத்தில் எவ்வளவு தவறு செய்கிறோம் என்று புரிந்தது.அதன்பின் சமைத்த உணவுகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, பழங்கள், பழச்சாறு, பச்சை காய்கறிகளை உண்ண பழகினேன். இப்படியே, 15 நாட்கள் தாண்டினேன். அதற்கு பின் தான், அதன் மகத்துவத்தை உணர்ந்தேன்.
'நொறுங்கத் தின்றால், 100 வயது' என்பது பழமொழி. நமக்கு, 32 பற்கள் இருக்கின்றன. நாம் ஒரு கவளம் உணவை வாயில் போட்டால், 32 முறை மென்று திரவமாக்கி, இரைப்பைக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிக்கிறது அது. ஆனால், இங்கு எல்லாரும் அப்படியா நேரம் ஒதுக்கி சாப்பிடுகின்றனர்... கோழி, இரை எடுக்கிற மாதிரி, 'கபக்'கென்று அப்படியே விழுங்குகின்றனர். அதுதான் எல்லா பிரச்னைக்கும் ஆரம்பம்.
தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும்; நின்று கொண்டு சாப்பிடுவது, உடல் விதிகளுக்கு புறம்பானது.சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் பருகக் கூடாது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்கு பின் தான், தண்ணீர் குடிக்க வேண்டும்.விக்கல் எடுக்கிறது, நெஞ்சை அடைக்கிறது எனில், நீங்கள் சரியாக மென்று சாப்பிடவில்லை என்று பொருள்.

குழந்தை எதிரில் எதுவும் செய்யாதீர்கள்!

மத்திய அரசின், 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருதைப் பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மூவரில் ஒருவரான, குழந்தைகளை கவனிக்கும் நர்ஸ் மணிமேகலை: தொற்றாலோ அல்லது உடல்நலப் பிரச்னையாலோ வரக்கூடிய நோயை யாராலும் தவிர்க்க முடியாது; ஆனால், அஜாக்கிரதையால் பாதிக்கப்பட்டு அழைத்து வரப்படும் குழந்தைகளைப் பார்த்தால், வேதனை தொற்றிக் கொள்கிறது.
எதையோ விழுங்கிட்டதாக வரும் குழந்தைகள்; கூரான பொருளால் காயம்பட்டு வரக்கூடிய குழந்தைகள்; பெட்ரோல், பினாயில், கழிப்பறை சுத்திகரிப்பான் போன்றவற்றை குடித்து விடும் குழந்தைகள்...மாத்திரை, மருந்துகளை விழுங்கி விடும் குழந்தைகள்; தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கும் குழந்தைகள் என, பல வித பிரச்னைகளுடன் அழைத்து வரப்படும் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்புணர்ச்சி, பெற்றோரிடம் குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றும்.
ஏனெனில், இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காரணம் என்ன என கண்டுபிடிப்பதை விட, அவர்கள் விழுங்கியது என்னவென்றே தெரியாமல், 'வீசிங்'கா, மூக்கில் ஏதாவது அடைத்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படும்.சில குழந்தைகளுக்கு, உள்ளே போன பொருளால், உணவுக்குழாயே எரிந்திருக்கும். அதை வெளியில் எடுத்தால், மறுபடியும் உணவுக்குழாய் வெந்து விடும். இதையெல்லாம் அவர்களுக்கு சொல்லவும் தெரியாது.
இந்த சூழலில் மருத்துவரும், செவிலியரும் எவ்வளவு இக்கட்டைச் சந்திப்பர் என்று யோசித்து பாருங்கள்.எந்த குழந்தையாக இருந்தாலும், அது தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்வதை, அப்படியே தானும் செய்ய நினைக்கும். சிறு குழந்தை தானே என, நீங்கள் இடுப்பில் வைத்தபடியோ அல்லது அதன் கண்ணில் தென்படும் வகையிலோ, ஒரு மாத்திரையோ, மருந்தோ சாப்பிட்டால், நீங்கள் இல்லாத சமயம், தானும் குடிக்க, விழுங்க அந்தக் குழந்தை முயற்சி செய்யும். ஒரு ஜூசை குடித்தீர்கள் என்றால், அதே நிறத்தில், வடிவத்தில் இருக்கும் கழிப்பறை சுத்திகரிப்பானையோ, வேறு ஆபத்தான பானத்தையோ எடுத்துக் குடித்து விடும்.
அதனால், குழந்தைகள் எதிரில் எதையும் செய்யாதீர்கள்; அவர்கள் கைக்கு எட்டும் இடத்தில், எதையுமே வைக்காதீர்கள்.குழந்தைகளை தனியாக விடாமல், பக்கத்தில் யாராவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202212:29:38 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 70 வயதில் ஒருத்தன் ஆட்டம் போடுவான் கடவுள் சும்மா விட்டு விடுவார்
Rate this:
Cancel
venkatesh - hyderabad,இந்தியா
23-ஜன-202211:20:25 IST Report Abuse
venkatesh Very nice article & must need of the time.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X