புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு, வரும் 31ல் அனைத்து கட்சிக் கூட்டம் நடக்கவுள்ளது.பார்லிமென்டின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 31ல் துவங்கவுள்ளது.
![]()
|
பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் போதெல்லாம், வழக்கமாக நடைபெறும் அலுவலான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 31ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது.
![]()
|
பிரதமர் மோடி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்போது, லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அரசு தரப்பு கேட்டு, அதற்கேற்ற வகையில் அலுவல்கள் திட்டமிடப்படும்.
- நமது டில்லி நிருபர் -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement