எல்லை தாண்டுவதை தடுக்க அமெரிக்கா-கனடா கூட்டு நடவடிக்கை

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
டொரன்டோ-''அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக எல்லை தாண்டிச் செல்வோரை தடுக்க, அந்த நாட்டுடன் இணைந்து செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன,'' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடும் பனிப் பொழிவை தாங்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டொரன்டோ-''அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக எல்லை தாண்டிச் செல்வோரை தடுக்க, அந்த நாட்டுடன் இணைந்து செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன,'' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.latest tamil news
வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடும் பனிப் பொழிவை தாங்க முடியாமல் உயிரிழந்தனர்.நம் நாட்டின் குஜராத்தைச் சேர்ந்த அவர்களது இறப்பு உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் அடங்கிய குடும்பம் உயிரிழந்தது மிகப் பெரிய சோகம். தற்போது உள்ளதை விட நல்ல வாழ்க்கை வாழ அவர்கள் ஆசைப்பட்டு உள்ளனர்.

அதை, ஆள் கடத்தல் ஏஜென்டுகள் பயன்படுத்தி சட்ட விரோதமாக எல்லையை கடக்க உதவிஉள்ளனர். அதிக ஆபத்து உள்ள இதுபோன்ற முயற்சியை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக எல்லை தாண்டுவதை தடுக்க அமெரிக்காவுடன் இணைந்து தீவிர செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஇதற்கிடையே, இறந்த இந்தியர்களின் விபரங்கள் தொடர்பாக கனடா அதிகாரிகளை இந்திய துாதரகங்கள் தொடர்பு கொண்டுஉள்ளன. இறந்த குழந்தை, சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்கள் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கனடாவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்தியர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, பனியில் இறந்த குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. பணத்திற்காக அவர்களை அழைத்து வந்த வாகன ஓட்டுனர் ஷான்ட் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202210:09:44 IST Report Abuse
Kasimani Baskaran இரண்டு நாடுகளும் பேச்சு மட்டுமே சிறாப்பாகப் பேசுவார்கள் ஆனால் எல்லையில் ஒரு கட்டுப்பாடும் கிடையாது.
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
23-ஜன-202208:23:58 IST Report Abuse
Bush மிக நீண்ட எல்லை நயாகரா முதல் சியாட்டில் நகரம் வரை எல்லை மிக அருகில் கிட்ட தட்ட ஆறாயிரம் கிலோ மீட்டர் ..
Rate this:
Cancel
RK -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-202207:23:22 IST Report Abuse
RK திருட்டு வேலை... இந்தியாவில் மட்டுமே நடப்பதற்கான வாய்ப்பு அதிகம். மற்ற நாடுகளில் இதுபோல்தான் விளைவு இருக்கும். இந்தியர்களின் பெயரை கெடுப்பதற்கே என இந்த மாதிரி இந்தியர்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X