பண்ணை வீட்டில் உடல்கள்; சல்மான் கான் மீது புகார்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (7)
Advertisement
மும்பை,-மஹாராஷ்டிராவில் உள்ள பிரபல நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில், திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக எழுந்த புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு உள்ளது.இந்த வீட்டிற்கு அருகே கேத்தன் கக்கட் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை,-மஹாராஷ்டிராவில் உள்ள பிரபல நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில், திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக எழுந்த புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsமஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு உள்ளது.இந்த வீட்டிற்கு அருகே கேத்தன் கக்கட் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. சமீபத்தில் இவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி, தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சல்மான் கான் பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் நடப்பதாகவும், அங்கு திரையுலக பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியது, தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதில், சல்மான் கானின் மதம் குறித்தும் அவர் அவதுாறாக பேசி உள்ளார்.


latest tamil news
இந்நிலையில் கேத்தன் கக்கட்டிற்கு எதிராக சல்மான் கான் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சல்மான் கானின் வழக்கறிஞர் பிரதீப் காந்தி ஆஜரானார்.அப்போது, நீதிபதியிடம் அவர் கூறியதாவது:எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் சல்மான் கான் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. அவர் மதம் குறித்து அவதுாறாக பேசி உள்ள கேத்தன் கக்கட்டிற்கு, இனி இதுபோன்ற கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். எனினும், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க கேத்தன் கக்கட்டிற்கு உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
28-ஜன-202209:33:13 IST Report Abuse
seshadri இதில் முக்கியமான விஷயம் குழந்தை கடத்தல் இது விசாரிக்க வேண்டிய ஒன்று.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-ஜன-202211:15:00 IST Report Abuse
S.Baliah Seer சல்மான்கான் பண்ணை வீட்டைத் தோண்டி பார்க்க வேண்டியது தானே.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-ஜன-202212:38:43 IST Report Abuse
pradeesh parthasarathyஎம் ஜி ஆரின் ராமவாரத்தை தோண்டி பார்ப்பீங்களா ......
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-ஜன-202205:05:55 IST Report Abuse
Sanny MGR கதை முடிந்த கதை, இப்போ நடப்பதை தடுக்கணும்....
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
27-ஜன-202206:55:48 IST Report Abuse
Saiகட்டுமரம் கதைதான் சாகாவரம் பெற்ற கதை IF YOU WOULD NOT BE FORGOTTEN AS SOON AS YOU ARE DEAD, EITHER WRITE SOMETHING WORTH READING OR DO THINGS WORTH WRITING...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
23-ஜன-202210:59:58 IST Report Abuse
Barakat Ali பாலிவுட் நடிகர்கள் நடத்தை நாடறிந்ததே
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
27-ஜன-202206:57:10 IST Report Abuse
Sai……...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X