கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவு பழக்க வழக்கங்களை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை, புதிது புதிதாக தயாரித்து பொதுமக்களுக்கு பகிர்ந்து வருகிறார், ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன். இவர், உணவியல் மற்றும் விடுதி மேலாண்மை துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.அவர் பரிந்துரைக்கும் புதுவித டயட்... முருங்கைக்கீரை பர்தா வானலியில் எண்ணெய் ஊற்றாமல், 3 வர மிளகாயை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி, ஒரு தேக்கரண்டி நறுக்கிய பூண்டு, ஆறு பச்சை மிளகாய், ஒரு நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கி, அதில் பாதியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பாதியில், 3 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை, அரைத்தேக்கரண்டி மல்லித்துாள், சோம்புத்துாள், ஒரு தேக்கரண்டி மிளகுத்துாள் ஆகியவற்றை வதக்கி ஆறிய பின்பு அரைத்து எடுத்துக்கொள்ளவும். வதக்கிய வரமிளகாயை பொடி செய்து, தனியாக எடுத்து வைத்த வெங்காயம், பூண்டு கலவையில் சேர்த்துக்கொள்ளவும். அரைத்த முருங்கை கலவையுடன் சேர்த்து பரிமாறலாம். நோய் எதிர்ப்பு சாறு பெரிய நெல்லிக்காய் சாறு, 50 மி.லி., இஞ்சிச்சாறு 10 மி.லி., எலுமிச்சை சாறு 5 மி.லி., துளசிச்சாறு 50 மி.லி., தண்ணீர் 150 மி.லி., ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்நோய் எதிர்ப்பு சாறு தயாரிக்கப்படுகிறது. தேவையெனில், சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம். சிறியவர்கள் 100 மில்லியும் , பெரியவர்கள் 250 மி.லியும்., அருந்தலாம்.தினமும் காலை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து எடுத்துக்கொள்வதே நோய் எதிர்ப்பு சக்தியை நிலையாக உடலில் ஏற்படுத்த உதவும். என்கிறார் அஜீத்குமார் லால் மோகன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE