ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகப்படியாக இருக்கும். மார்கழியை விடவும், தை மாதத்தில் குளிர் வாட்டி எடுக்கிறது. ஸ்வெட்டர், குல்லா அணிந்து கொண்டு, உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வது போல், குளிர்காலத்தில் சருமத்துக்கும் கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.குளிர்கால சரும பாரமரிப்பு குறித்து இணைய தளத்தில் ஏராளமான தவறான நம்பிக்கைகள் உலா வருகிறது. அவற்றில், பலரும் நம்புவது குளிர்காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டாம் என்பதே. ஆனால், குளிர்காலத்தில் சன் ஸ்கிரீன் கிரீம் அல்லது லோசனை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என அழகு கலை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.ஏன் குளிர்காலத்தில் அவசியம்?சூரியனிலிருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களிலிருந்து சன் ஸ்கிரீன் சருமத்தை பாதுகாக்கிறது. குளிரான சூழல் இருப்பதாக தோன்றினாலும், கோடையை விடவும் குளிர்காலத்தில் புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் அதிகம் ஊடுருவுகிறது.இவை முன்கூட்டியே முதுமை, சருமத்தில் சுருக்கம் மற்றும் பிக்மென்டேஷன் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குளிர், மழை என எல்லா காலத்திலும் சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.சன் ஸ்கிரீன் பலன்கள்n குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதம் காரணமாக தோல் வறண்டு போகிறது. இதனால், தோலில் வெடிப்பு, விரிசல் ஏற்படும். சன் ஸ்கிரீன் குளிர்காலத்தில் சருமத்தில் போதுமான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.n சூரிய கதிர்களை நீண்ட நேரம் எதிர்கொள்ளும்போது, தோல் செல்கள் விரைவில் முதுமை அடைவதுடன், செல்களின் டி.என்.ஏ.,வையும் மறைமுகமாக பாதிக்கிறது. சன் ஸ்கிரீன் தோல் சுருக்கங்கள் மீது பயனுள்ள வகையில் செயல்பட்டு முன்கூட்டியே முதுமை அடைவதை தடுக்கிறது.n மாசு, துாசு மற்றும் சூரியக்கதிர்களின் நீண்ட நாள் பாதிப்பு காரணமாக பிக்மென்டேசன் எனப்படும் தோலில் கருமையான திட்டுகள் ஏற்படும். சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதன் மூலம் தோல் நிறமி கோளாறு பிரச்னையை தவிர்க்கலாம்.