வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்-“ஜம்மு - காஷ்மீரில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணிகள் முடிந்ததும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இங்கு நிலவும் சூழல் சரியானதும் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்குறுதி அளித்தார்.
![]()
|
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் நீக்கப்பட்டது. பின், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் சிறந்த மாவட்ட நல்லாட்சி குறியீட்டை ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிமுகம் செய்து வைத்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த நிகழ்ச்சியில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் அமித் ஷா கூறியதாவது:சிறந்த மாவட்ட நல்லாட்சி குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதற்கு ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு என் வாழ்த்துகள். இந்த குறியீடு அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதன்கீழ் மாவட்ட அளவில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை கண்காணிக்கப்படும். அதன்படி சிறந்த மாவட்டங்களின் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும்.ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
![]()
|
அந்த பணிகள் முடிந்ததும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.பலர் பலவிதமாக கூறுகின்றனர். நான் ஒன்றை மட்டும் கூறுகிறேன். பார்லிமென்டில் நான் உறுதி அளித்ததை போல், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும். இங்கு நிலவும் சூழல் சரியானதும் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement