இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (17)
Advertisement
புதுடில்லி,-தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் பொது நிதியில் இருந்து மக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-தேர்தல் பிரசாரத்தின்போது அரசின் பொது நிதியில் இருந்து மக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



latest tamil news



உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.


latest tamil news


இந்த தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும், அரசின் பொது நிதியில் இருந்து பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.அவ்வாறு அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தை முடக்குவது அல்லது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202216:24:36 IST Report Abuse
அப்புசாமி பாஞ்சி லட்சம் குடுக்கற வரைக்கும் தடை போடாதீங்க.. இதுவரை போட்ட இலவச(!) தடுப்பூசிக்கு யார் பணம் குடுத்தாங்க? ஏன் மத்தவங்க மெடல் குத்திக்கிட்டாங்கன்னு கேளுங்க? தடுப்பூசி இலவசம் நா, பாரத் பயோடெக்குக்கு எவ்ளோ பணம் எதுக்கு குடுத்தாங்கன்னு கேளுங்க.
Rate this:
Cancel
Radhakrishnan Subramanian - Mahé,செசேல்ஸ்
23-ஜன-202213:16:11 IST Report Abuse
Radhakrishnan Subramanian இலவசம் கொடுத்தே மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள். சுதந்திரம் கிடைத்து 70 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டாலும் இன்னும் அவர்கள் பொருளாதாரத்திலே முன்னேற விடாமல் இந்த அரசியல் கட்சிகள் செய்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
23-ஜன-202212:34:23 IST Report Abuse
Ramesh Sargam தேர்தல் சமயங்களில் இலவசங்கள் கொடுத்தல், தேர்தல் நேரத்தில் தங்கள் சுயநலனுக்காக கட்சி தாவுதல், தேர்தல் நேரத்தில் ரோடு போடுதல் இப்படி ஒரு சுயநோக்கு வேளைகளில் இறங்கும் அரசியல்கட்சிகள், தேர்தலில் போட்டியிடவே கூடாது என்று ஒரு கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும். மீறும் கட்சிகளின் அங்கீகாரம் கலையப்படவேண்டும். அந்த கட்சி தேர்தலில் போட்டியிடமுடியாமல் தடுக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X