வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் 31ல் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட்டத்தொடரை துவக்கி வைத்து உரையாற்றுவார். ஜூலையில் பதவி ஓய்வு பெறும் ஜனாதிபதியின் கடைசி பார்லிமென்ட் உரை இது.
![]()
|
இந்த உரையின் போது தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் அனைவரும் ஒரு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகஜனாதிபதி மாளிகைக்கு செய்தி கிடைத்துள்ளது. 'நீட்' தேர்வு விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு எடுக்கவில்லை என்பதால், வாயில் கறுப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
![]()
|
வழக்கமாக ஜனாதிபதி உரையின் போது அனைத்து எம்.பி.,க்களும் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இப்படி தி.மு.க., போராட்டம் நடத்தினால், தன் கடைசி பார்லிமென்ட் உரைக்கு பிரச்னை ஏற்படும் என ஜனாதிபதி நினைப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜனாதிபதி மாளிகையின் சீனியர் அதிகாரிகள் தி.மு.க., தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement