இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': லாரி மோதி 52 ஆடு்கள் பலி

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022
Advertisement
இந்திய நிகழ்வுகள்அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 7 பேர் பலி; 16 பேர் காயம்மும்பை-மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் பலியாகினர்; காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையின்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 7 பேர் பலி; 16 பேர் காயம்
மும்பை-மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் பலியாகினர்; காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையின் மத்தியில் உள்ள டார்டியோ பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.அவற்றில் 20 மாடி குடியிருப்பின் 18வது மாடியில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. கட்டடத்தின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்து சேரும் முன், வீடுகளில் துாங்கிக்கொண்டிருந்த பலரும் எழுந்து கும்பல் கும்பலாக வெளியேறினர். தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், 19வது மாடியில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளை விரைந்து மேற்கொண்டனர்.

இருப்பினும் வீடுகளுக்குள் சிக்கிய ஏழு பேர் பரிதாபமாக பலியாகினர்; 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

'


கிளப் ஹவுஸ்' சர்ச்சை: இளைஞர் கைதுபுதுடில்லி: பெண்களுக்கு எதிரான தகவல் பகிரும் 'கிளப் ஹவுஸ்' செயலியில் பிஸ்மில்லா என்ற பெயரில் 'ஆடியோ' வெளியிட்டவர் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த ராகுல் கபூர், 18, என தெரியவந்தது. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்


தடம் புரண்ட சரக்கு ரயில்மதுரா: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பெட்டிகள், பிருந்தாவன் அருகே நேற்று முன்தினம் இரவு தடம்புரண்டன. அருகில் உள்ள தண்டவாளங்கள் மீதும் பெட்டிகள் விழுந்ததால், டில்லி - மதுரா இடையே ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நக்சலைட்கள் வெறிச் செயல்பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூரில் போலீசாருக்கு தகவல் கொடுக்கும் அந்தோ ராம் என்பவரை நேற்று முன்தினம் நக்சலைட்கள் கொலை செய்து, கங்களூர் சாலையில் உடலை வீசினர். மற்றொரு பகுதியில், சாலை கட்டுமான பணியில் இருந்த மூன்று வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தமிழக நிகழ்வுகள்
லஞ்சம் வாங்கியது அம்பலம் 2 எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்'


கோவை:கோவையில், லஞ்சம் வாங்கிய, போக்குவரத்து எஸ்.ஐ., உட்பட மூவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.கோவை மாநகர போலீஸ் போக்குவரத்து பிரிவில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் தேவராஜ். இவரும், போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் அனந்த கிருஷ்ணன், ஜெகன் ஆகியோர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக வீடியோ வெளியானது.இதுபற்றி விசாரணைக்கு போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். விசாரணையில், ராமநாதபுரம் சிக்னலில் பணியில் இருந்த எஸ்.ஐ., தேவராஜ் உள்ளிட்ட மூவரும், வேறொரு நபரை நியமித்து, லஞ்ச வசூலில் ஈடுபட்டது உறுதியானது. மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.


latest tamil news
கார் பந்தய தகராறு; 4 பேர் கைது


மரக்காணம்-மரக்காணம் இ.சி.ஆரில் கார் பந்தயத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்

.கடலுாரைச் சேர்ந்தவர் பிரின்ஸ், 20; இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, இனோவா கிரிஸ்டா காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 22; இவரது நண்பர்கள் அஜித், 26; ஷேக் ஷாதிக், 22; பாலமுருகன், 26; வினோத், 26 ஆகியோர், வோக்ஸ் வேகன் விண்டோ காரில் புதுச்சேரியில் இருந்து மரக்காணம் சென்றனர்.

காரை அஜித்குமார் ஓட்டினார்.அனுமந்தை சுங்கச்சாவடி அருகே பிரின்சிடம், அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள், எங்களுடன் கார் பந்தயத்திற்கு வருகிறாயா என கூச்சலிட்டு அழைத்துள்ளனர். பிரின்சும் ஒப்புக் கொண்டுள்ளார்.இருவரும் இ.சி.ஆரில் மின்னல் வேகத்தில் காரை ஓட்டியுள்ளனர். இதில், பிரின்ஸ் வெற்றி பெற்றுள்ளார். மரக்காணம் தீர்த்தவாரி அருகே பிரின்ஸ் காரை மறித்து, அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் பிரின்சிடம் தகராறு செய்து, அவரிடமிருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

பிரின்ஸ் புகாரின்படி, மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து, அஜித்குமார், வினோத், அஜித், ஷேக் ஷாதிக் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்.


latest tamil news
கமுதி அருகே லாரி மோதி 52 ஆடுகள் பலிகமுதி -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி 45 நாகராஜ் 40. இவர்கள் 2 பேரும் 130க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு கமுதி-- அருப்புக்கோட்டை ரோட்டில் காவடிபட்டி அருகே கிடையில் அடைப்பதற்காக ஆடுகளை கொண்டு சென்றனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கமுதிக்கு எம்சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் 52 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. நாகராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி ஆடுகளின் உரிமையாளர் முனியசாமி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.


ரூ 1 லட்சம் திருட்டு


திருப்பூர்:திருப்பூர் - தாராபுரம் ரோடு, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கருப்பையா, 45; தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த, 13ம் தேதி வீட்டை பூட்டி விட்டு கொடைக்கானல் சென் றார். பின், நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X