இது உங்கள் இடம்: தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கும் முன்...

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (38) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ள கருத்துக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பின், அ.தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ள கருத்துக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.latest tamil newsஅதன் பின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஞானோதயம் வந்து அறிக்கை வெளியிடுகிறார்.ஒரு மாவட்ட செயலர் முதலில் ஊடகங்களில் அறிக்கை வெளியிடுகிறார். அதன் பின், கட்சி ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிடுகிறார். அ.தி.மு.க.,வில் தற்போது எல்லாமே தலைக்கீழாக தான் நடக்கிறது.

அரசு செய்தி குறிப்பில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி படங்கள் வாயிலாக, எம்.ஜி.ஆர்., தனக்கென தனி இடம் பெற்றார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படங்கள் வருவதற்கு முன்னரே, எம்.ஜி.ஆர்., திரை உலகில் கோலோச்சினார் என்று, ஜெயக்குமார் கூறுகிறார்.'கருணாநிதி கதை, வசனம் எழுதிய படத்தின் வாயிலாகத் தான், எம்.ஜி.ஆர்., திரை உலகில் அறிமுகமானார்' என்று குறிப்பிட்டு இருந்தால் தான், அது தவறு.'சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கு, எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டியது, கருணாநிதி தான்' என்கிறது, அரசு செய்திக் குறிப்பு.

'எம்.ஜி.ஆர்., உயிருடன் இருக்கும் போதே, அந்த பெயர் முடிவு செய்யப்பட்டது' என்று மறுத்திருக்கிறார், ஜெயக்குமார். சரி, அப்படியே இருக்கட்டும்...எம்.ஜி.ஆர்., மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலையின் பெயரை மாற்றவில்லையே!மேலும் அப்பல்கலையில், எம்.ஜி.ஆர்., சிலையை நிறுவிய, கருணாநிதி செயலை, அ.தி.மு.க., வரவேற்க வேண்டுமே தவிர, அதில் குறையை தேடக் கூடாது.அது எல்லாம் சரி... கடந்த ஐந்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை பொது மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில், அரசு செய்தி குறிப்பு ஏதும் வெளியிட்டது உண்டா?


latest tamil news'எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை, கருணாநிதி வழங்கினார்' என்று அரசு செய்திக்குறிப்பு சொல்கிறது. 'இது கட்டுக்கதை' என்கிறார், பன்னீர்செல்வம்.உறந்தை உலகப்பன் என்பவர் தான், எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை உருவாக்கினார்; அப்பட்டத்தை கருணாநிதி ஒரு விழாவில், எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்.'சிறுவயதில், கருணாநிதி எழுதிய வசன புத்தகங்களை படித்து மனப்பாடம் செய்திருக்கிறேன்' என, பன்னீர்செல்வம் சட்டசபையில் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

கருணாநிதியிடம் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத ஓ.பன்னீர்செல்வமே, அவரது வசனத்தை பெருமையாக சொல்கிறார். அப்படி இருக்கும் போது, 'எம்.ஜி.ஆர்., படத்திற்கு கதை, வசனம் கருணாநிதி எழுதினார்' என்று தி.மு.க., பெருமையாக கூறுவதில் என்ன தவறு?அ.தி.மு.க.,வினர் முதலில் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை மற்றும் கட்சி வரலாற்றையும் நன்கு படிக்க வேண்டும்; அதன் பின், தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கட்டும்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
23-ஜன-202213:50:15 IST Report Abuse
Svs Yaadum oore //... தமிழன் சென்றால் படிச்சி வெளி நாட்டிற்கு தாண் சொல்லுகிறான்....//..அப்படியா? அப்ப ஆந்திராவிற்கு இங்கிருந்து செம்மரம் வெட்டும் கூலி வேலைக்கு செல்பவர்கள் ஆந்திர போலீஸால் விரட்டியடிப்பு. அதில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆந்திரா வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று இரெண்டு மாதம் முன்பு கூட செய்தி . ஆந்திர வெளி நாட்டில் உள்ளதாக முரசொலி செய்தியா ? .
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
23-ஜன-202219:01:14 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்,,,,,...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜன-202212:27:08 IST Report Abuse
sankaseshan கழகங்களின் தரக்குறைவான அரசியலால் தமிழ்நாடு நாறுகிறது கல்விக்காக மனப்பூர்வமாக பாடுபட்ட ராமானுஜன் CV ராமன்,ஊ வே சா பெயரல்லாம் வைக்க மாட்டார்கள் அவர்கள் பார்ப்பனர்கல்
Rate this:
23-ஜன-202212:36:02 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்நீ தமிழனா? இல்லை திராவிடனா என்று எங்களை கேட்கும்போது எங்கள் பதில்:: நீ ஹிந்திக்காரன் என்றால் நான் தமிழன், நீ வந்தேன் யூதர் ஆரியன் என்றால் நான் திராவிடன், இப்போ நீ சிங்கி என்றால் நான் மனுசனா இருக்கேன் போதுமா...
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
23-ஜன-202212:38:00 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்........
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202218:03:29 IST Report Abuse
Kasimani Baskaran'ஆரியன் என்றால் நான் திராவிடன்" - வெட்கமே இல்லையா? எல்லா திராவிடனும் தமிழனல்ல. ஆக திராவிடனே தமிழகத்தைப் பொருத்தமட்டில் வந்தேறிதான். தாங்களே வந்தேறியாக இருந்து கொண்டு பூர்வ தமிழர்களை வந்தேறி என்று சொல்லுவது ஓவரான திமிர். வந்தாரை பெருந்தன்மையுடன் வாழவைத்தாலும் என்றும் தமிழகம் தமிழனுக்குத்தான் - நிச்சயம் வந்தேறிகளுக்கு அல்ல....
Rate this:
Cancel
சீணிசாமி, சிலுக்குவாற்பட்டு 200 ரூபாய் பரம்பரை koththadimaiyin வாக்கு மூலம். ஐயா ஈஸ்வரா, முதலில் உங்கள் கட்சியான திமுகவை ஒழுங்காக ஆட்சி புரிய சொல்லுங்க. அப்புறம் அடுத்த கட்சிய பத்தி பேசலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X