வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடிக்கு காரணமான அதிகாரிகள், தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விபரங்களை, அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.
![]()
|
தமிழக அரசு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கியது. அதில், தலா 1 கிலோ பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு; தலா அரை கிலோ பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு ஆகியவை இடம் பெற்றிருந்தன.மேலும், தலா 100 கிராம் நெய், மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித்துாள், கடுகு, சீரகம்; 200 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு; தலா 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு; 10 கிராம் ஏலக்காய், முழு கரும்பு, துணிப்பை ஆகியவை இடம் பெற்றிருந்தன.இதற்காக, அரசு 1,297 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது.
மிளகு, வெல்லம்முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவற்றை ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களும்; மற்ற அனைத்து பொருட்களையும், நுகர்பொருள் வாணிபக் கழகமும் கொள்முதல் செய்தன. நெய் மட்டும் ஆவின் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த புளி, மிளகு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாகவும், கலப்படம் செய்த பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதற்கு ஒரு கார்டுதாரருக்கு உரிய பரிசு தொகுப்பில், 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை 'கமிஷன்' சென்றதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், பொங்கல் பரிசு வினியோகம் தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆேலாசனை நடத்தினார். அதில், பரிசு வினியோகத்தில் புகார் எழ காரணமான அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
![]()
|
மேலும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள், மீண்டும் டெண்டரில் பங்கேற்காத வகையில் கறுப்பு பட்டியல் சேர்ப்பது உள்ளிட்ட, கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்தார். சேகரிப்புஎனவே, நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள், நிறுவனங்களின் பட்டியலை, அரசு வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்மை என ரேஷன் கார்டுதாரர்கள் நம்புவர்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்தெந்த அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்ததும் அவை வெளியிடப்படும்' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement