வட பழநி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (17)
Advertisement
சென்னை: வடபழநி ஆண்டவர் கோயிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (ஜன.23 )கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் ஆன்லைனில் கண்டுகளித்தனர்.சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோயில். இக்கோயிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வடபழநி ஆண்டவர் கோயிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ராஜகோபுர விமானங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (ஜன.23 )கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் ஆன்லைனில் கண்டுகளித்தனர்.latest tamil news


சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோயில். இக்கோயிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, 2021ல் பாலாலயம் செய்யப்பட்டு, ஆகம விதிகளின் படி திருப்பணிகள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளன.

இதையடுத்து, யாகசாலை பிரவேசம், 19ம் தேதி துவங்கி முதற்கால யாக பூஜை, ஜபம், ஹோமம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் அஷ்டபந்தன மருந்து சார்த்தும் வைபவமும், ராஜகோபுரங்களில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தும் பணிகளும் நடந்தன.


latest tamil news
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணி முதல் விசேஷ சந்தி, நான்காம் கால யாக பூஜை, ஜபம், ஹோமங்கள் நடந்தன. பகல், 12:௦௦ மணிக்கு மகா பூர்ணாஹுதி நடந்தது. மாலை 5:30 மணிக்கும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை 10:30 முதல் 11:00 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக பணிகளை நேற்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.பின், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:அறநிலையத் துறையுடன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் இணைந்து, 18 திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் வாயிலாக நிதியை பெற்று, அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், திருப்பணிகள் நிகழ்த்தப்பட்டன.


latest tamil news


Advertisement


வடபழநி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம், தேதி குறிப்பிட்டபடி இன்று நடந்தது. இக்கோவில் திருப்பணி குறித்து, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, ஐந்து முறை தக்கார், அறநிலையத் துறை கமிஷனரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இத்தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதியும் தேவையான உதவிகளை செய்துள்ளார். கும்பாபிஷேகத்திற்காக அறுபடை வீடுகள், ஒன்பது பிரசித்தி பெற்ற கோயில்கள், நாட்டில் உள்ள 15 புண்ணிய நதிகளின் நீர் தருவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இக்கோவிலின் கும்பாபிஷேக நாள், இரண்டு மாதங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. தற்போது, கொரோனா நோய் தொற்று பரவும் சூழலில், இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இருப்பினும், கும்பாபிஷேக நிகழ்வுகளை தடையின்றி நடத்த முதல்வர் உத்தரவிட்டார் . இதில், அர்ச்சகர்கள், உதவியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், நகரத்தார்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . அடிப்படை வசதிகள்பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வீட்டில் இருந்தபடி, பலர் ஆன்லைனில் https://www.dinamalar.com/vadapalani/index.php பார்த்தனர்.


latest tamil news
திங்கள் கிழமை முதல் வழக்கம் போல, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களுக்கு தேவையான கொரோனா கட்டுப்பாடுகளுடன், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


latest tamil news
இந்நிகழ்ச்சிக்கு அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


latest tamil news
வட்டமிட்ட கருட பகவான்கள்


latest tamil news


கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது வானத்தில் 4 கருடபகவான்கள் வட்டமடித்தன. இதனை பார்த்த பக்தர்கள் பரவசத்துடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என விண்ணை பிளக்க மந்திரம் எழுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
23-ஜன-202218:11:29 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஓம் முருகா சரணம் 🙏
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜன-202215:34:11 IST Report Abuse
sankaseshan முருகனுக்கு கும்பாபிஷேகம் செய்ய முதல்வரின் அனுமதி பெற வேண்டியுள்ளது . கலிகாலம்டா சாமி
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-ஜன-202214:52:19 IST Report Abuse
M S RAGHUNATHAN தமிழ் போராளிகள் சத்ததையே காணவில்லை. ஏன் ? ஏன் தமிழில் குட முழுக்கு நடத்தப் படவில்லை?
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜன-202216:11:22 IST Report Abuse
Vena Sunaஏன் சும்மா இருக்க முடியாதா >...
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜன-202216:22:49 IST Report Abuse
Vena Sunaஉங்கள் புகைப்படங்கள் அருமை..நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X