கடைசி ஒரு நாள் போட்டி; இந்தியா பவுலிங்| Dinamalar

கடைசி ஒரு நாள் போட்டி; இந்தியா பவுலிங்

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (1) | |
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இன்று இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி போட்டி கேப்வுனில் நடக்கிறது. அதில், டாஸ் வென்ற இந்திய
INDVSSA, SAvIND-,3rdODI

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இன்று இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி போட்டி கேப்வுனில் நடக்கிறது. அதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியில் ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், கிருஷ்ணா, சஹார், பும்ரா, சஹால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


latest tamil news




இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X