குழந்தைகள் கொலை: விவசாயிக்கு ஆயுள் சிறை

Added : ஜன 23, 2022 | |
Advertisement
சேலம்: குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், தலைவாசல், புளியங்குறிச்சி, இந்திர நகரை சேர்ந்த விவசாயி சரவணன், 34. இவரது மனைவி அமுதா, 29. இவர்களது குழந்தைகள் சந்தோஷ், 12, காவியா, 8. மனைவி மீது சந்தேகம் கொண்ட சரவணன், குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 2018 மே, 2ல்,

சேலம்: குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல், புளியங்குறிச்சி, இந்திர நகரை சேர்ந்த விவசாயி சரவணன், 34. இவரது மனைவி அமுதா, 29. இவர்களது குழந்தைகள் சந்தோஷ், 12, காவியா, 8. மனைவி மீது சந்தேகம் கொண்ட சரவணன், குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை எனக்கூறி, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 2018 மே, 2ல், குழந்தைகள் இருவரையும், விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச்சென்று தள்ளிவிட்டு கொலை செய்தார். இதுகுறித்து, அமுதா புகார்படி வீரகனூர் போலீசார் விசாரித்து, சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, சரவணனுக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X