பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி

Added : ஜன 23, 2022 | |
Advertisement
பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி வருகிற 29-ஆம் தேதி திருமங்கலம் அடுத்துள்ள குன்னத்தூர் அம்மா யோக மணி மண்டபத்தில் நடக்கிறது இதுபற்றிய விவரம் வருமாறு கோவிட்19 குரோனா நோய் தொற்றினால் முடங்கிக் கிடக்கின்ற இளைய சமுதாயத்தின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் மதுரை அம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளி

பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி வருகிற 29-ஆம் தேதி திருமங்கலம் அடுத்துள்ள குன்னத்தூர் அம்மா யோக மணி மண்டபத்தில் நடக்கிறது இதுபற்றிய விவரம் வருமாறு
கோவிட்19 குரோனா நோய் தொற்றினால் முடங்கிக் கிடக்கின்ற இளைய சமுதாயத்தின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் மதுரை அம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள குன்னத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் வருகிற 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது
6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை மாணவர்கள் 9 முதல் 10 வகுப்பு வரையிலான உயர்நிலை மாணவர்கள் +1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் இப் போட்டியில் பங்கேற்கலாம்
தன்னிகரில்லா தலைமை பண்பு கொண்ட தலைவர்களின் சிறப்பு என்ற பொதுத் தலைப்பில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 7 நிமிடங்கள் பேசலாம்


ரொக்கப்பரிசு


ஒவ்வொரு பிரிவிற்கும் ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் 1000மற்றும் ரூபாய் 500 என்று மூன்று பரிசுகளும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் மதிய உணவும் வழங்கப்படும்
29 ஆம் தேதி மாலை நடைபெறும் விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் திருக்கரங்களால் பரிசு வழங்கப்படும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவியர் நேரடியாக குன்னத்தூர் அம்மா யோக மணி மண்டபத்தில் வருகிற 29 ஆம் தேதி காலை 9 மணிக்கு நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்
போட்டிக்கான ஏற்பாடுகளை அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி பாரதி யுவ கேந்திர நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் செய்து உள்ளனர். தொடர்புக்கு 9442630815 .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X