ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம்: முதல்வர் எதிர்ப்பு

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் செய்ய திட்டமிட்டுள்ள திருத்தங்கள், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த
ஐ.ஏ.எஸ்.,  பணி விதிகள், திருத்தம், முதல்வர், ஸ்டாலின், எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் மத்திய அரசு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் செய்ய திட்டமிட்டுள்ள திருத்தங்கள், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இந்த உத்தேச திருத்தங்களுக்கு என்னுடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழ்நிலைக்கு இந்த திருத்தங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் . மத்திய அரசின் வசம் அதிகார குவிப்பிற்கு வழிவகுக்கும்.

மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிக்கு அனுப்ப வலியுறுத்துவது நிர்வாகத்தில் ஒரு தொய்வு நிலையை ஏற்படுத்திவிடும். மத்திய அரசு, வெளிச்சந்தையில் இருந்து வல்லுநர்களை தேர்வு செய்திடும் முறையால், மத்திய அரசு பணிக்கு செல்ல விரும்பும் அதிகாரிகளின் ஆர்வத்தையும் வெகுவாக குறைத்துள்ளது. புதிய சட்ட திருத்தமானது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி என்பதை சேதமடைய செய்துவிடும்.

சட்ட திருத்தத்தின்படி, அரசு பணி நிர்வாகத்திற்கு ஒரு நிலையற்ற தன்மையும், அலுவலர்கள் இடையே பணி ஆர்வத்தையும் குறைக்கும். இதனை செயல்படுத்தினால், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நிரந்தர அச்ச உணர்வுடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இது தற்போது வளர்ச்சி பாதையில் செல்ல விரும்பும் நம்முடைய நாட்டிற்கு உகந்தது அல்ல.


latest tamil newsபுதிய சட்ட திருத்தத்தின் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாறுதல்களை கைவிடுமாறும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு குறித்து கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகளோடு கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
24-ஜன-202202:20:18 IST Report Abuse
RandharGuy தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத பிரதமர் ......மேற்கு வங்கத்தில் வாங்கிய பலத்த இடி ....
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
24-ஜன-202202:16:06 IST Report Abuse
RandharGuy Think cooperative federalism In the words of jurist Nani Palkhivala, “A national consensus should clearly remind the Centre that it has not inherited the Viceroy's mantle of paramountcy… The Centre would have no moral authority to govern unless it displays a sense of constitutional morality, particularly a sense of justice and fairness towards the States”. In S.R. Bommai vs Union of India (1994), the Supreme Court held that “States have an independent constitutional existence and they have as important a role to play in the political, social, educational and cultural life of the people as the Union. They are neither satellites nor agents of the Centre”. We hope that the Centre will heed Sardar Patel's sage advice and the proposed amendments. In a federal setup, it is inevi that differences and disputes would arise between the Centre and the States. But all such quarrels should be resolved in the spirit of cooperative federalism and keeping the larger national interest in mind.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
23-ஜன-202223:46:34 IST Report Abuse
srinivasan District administrators at IAS cadres should be given full freedom to carry out their duties without interference from state government. Similarly. Panchyats and corporations, urban administration should be made autonomous for effective democracy.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X