முன்னாள் அமைச்சர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்த பழனிசாமி

Added : ஜன 23, 2022
Advertisement
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள, முன்னாள் அமைச்சர் அன்பழகனை அவரது வீட்டில், அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி சந்தித்தார்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட, 58 இடங்களில் கடந்த, 20ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது,

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள, முன்னாள் அமைச்சர் அன்பழகனை அவரது வீட்டில், அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி சந்தித்தார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட, 58 இடங்களில் கடந்த, 20ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, தங்கமணி, உதயகுமார், செங்கோட்டையன், கருப்பண்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்திருந்து, அன்பழகனை சந்தித்து சென்றனர். ஆனால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவில்லை என தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, 8:20 மணிக்கு கெரகோடஹள்ளியிலுள்ள அன்பழகன் வீட்டிற்கு பழனிசாமி வந்தார். பின் இருவரும் தனி அறைக்குள் சென்று, 20 நிமிடங்களுக்கு மேல் தனியாக பேசினர். பின் பழனிசாமி, 9:10 மணிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். இவர்கள் சந்திப்பின் போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, முல்லைவேந்தன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் கட்சி நிர்வாகிகள் வெளியே காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X