சாலை சீரமைப்பு பணியால் கடைகளை மூட 'நோட்டீஸ்'

Added : ஜன 23, 2022
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், நகர மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. புறநகர் பஸ் ஸ்டாண்டில் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மிகவும் சேதமான நிலையில் உள்ளது. இதுகுறித்து, நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அங்குள்ள சாலை சீரமைக்கப்பட உள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளை மூன்று நாட்களுக்கு அடைத்து வைக்க, நகராட்சி கமிஷனர் சித்ரா,

தர்மபுரி: தர்மபுரியில், நகர மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. புறநகர் பஸ் ஸ்டாண்டில் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மிகவும் சேதமான நிலையில் உள்ளது. இதுகுறித்து, நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அங்குள்ள சாலை சீரமைக்கப்பட உள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளை மூன்று நாட்களுக்கு அடைத்து வைக்க, நகராட்சி கமிஷனர் சித்ரா, கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவர், அங்கு நிறுத்தப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், டவுன் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி, இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பணி இன்று முதல் நாளை மறுநாள் மாலை, 6:00 மணி வரை நடக்கவுள்ளது என, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X