தர்மபுரிக்கு ரயிலில் வந்த 1,333 டன் யூரியா உரம்

Added : ஜன 23, 2022
Advertisement
தர்மபுரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வழங்க, 1,333 டன் இப்கோ யூரியா, சரக்கு ரயிலில் நேற்று தர்மபுரிக்கு வந்தது. மாவட்ட வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் தாம்சன், மாவட்ட இப்கோ அலுவலர் அப்துல்லா ஆகியோர், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 342.325 டன், தனியார் உரக்கடைகளுக்கு, 272.370 டன்

தர்மபுரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வழங்க, 1,333 டன் இப்கோ யூரியா, சரக்கு ரயிலில் நேற்று தர்மபுரிக்கு வந்தது. மாவட்ட வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் தாம்சன், மாவட்ட இப்கோ அலுவலர் அப்துல்லா ஆகியோர், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 342.325 டன், தனியார் உரக்கடைகளுக்கு, 272.370 டன் யூரியாவை லாரிகள் மூலம் அனுப்பினர். கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 216.95 டன், தனியார் உரக்கடைகளுக்கு, 393.30, இருப்பு கிடங்குக்கு, 108.085 டன் யூரியாவை லாரிகளில் அனுப்பினர். விவசாயிகள் தங்களது ஆதார் எண் கொண்டு, விற்பனை முனைய கருவி மூலம் யூரியா பெறலாம் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X