இளம்பெண்ணிற்கு திருமணம்: போக்சோவில் 3 பேர் கைது

Added : ஜன 23, 2022
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த, 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவரது உறவினர் செல்வா என்பவரை காதலித்துள்ளார். இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கடந்த, 2020ல் கர்நாடக மாநிலம், கனகபுரா அடுத்த காணலை சேர்ந்த உறவினரான கிருஷ்ணா என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருடன் வாழ மறுத்த சிறுமி கடந்த, 2021 செப்.,ல்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த, 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அவரது உறவினர் செல்வா என்பவரை காதலித்துள்ளார். இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கடந்த, 2020ல் கர்நாடக மாநிலம், கனகபுரா அடுத்த காணலை சேர்ந்த உறவினரான கிருஷ்ணா என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அவருடன் வாழ மறுத்த சிறுமி கடந்த, 2021 செப்.,ல் சொந்த ஊரான ஊட்டமலைக்கு வந்துவிட்டார். மீண்டும் செல்வாவுடன் பழக்கம் ஏற்பட்டதில், சிறுமி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதை செல்வாவிடம் கூறி தன்னை ஏற்ற கூறியபோது அவர் மறுத்து விட்டார். ஒகேனக்கல் போலீசில் சிறுமி அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ஒகேனக்கல் ஊட்டமலை அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த செல்வா, 23, கோவிந்தன், 42, கனகபுரா அடுத்த காணலை சேர்ந்த கிருஷ்ணன், 25, உள்ளிட்ட மூன்று பேரை போக்சோவில் கைது செய்து, தலைமறைவாக உள்ள இரு வீட்டாரை சேர்ந்த நான்கு பேரை தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X