இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

Added : ஜன 23, 2022
Advertisement
ஓசூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் தாஸ், 25. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபத்திலுள்ள தனியார் கட்டுமான தொழிற்சாலையில், கடந்த இரு மாதமாக பணியாற்றி வந்தார்; நேற்று காலை வழக்கம்போல் கான்கிரீட் கலவை இயந்திரத்தை ஊழியர்கள் போட்டனர். மின்சாரமின்றி கலவை இயந்திரம் இயங்கவில்லை. மின் சுவிட்சை அணைக்காமல், ஊழியர்கள் மற்ற பணியை செய்து

ஓசூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் தாஸ், 25. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபத்திலுள்ள தனியார் கட்டுமான தொழிற்சாலையில், கடந்த இரு மாதமாக பணியாற்றி வந்தார்; நேற்று காலை வழக்கம்போல் கான்கிரீட் கலவை இயந்திரத்தை ஊழியர்கள் போட்டனர். மின்சாரமின்றி கலவை இயந்திரம் இயங்கவில்லை. மின் சுவிட்சை அணைக்காமல், ஊழியர்கள் மற்ற பணியை செய்து கொண்டிருந்தனர். அவர்களுடன், சந்தோஷ்குமார் தாசும் பணியாற்றினார். திடீரென மின்சாரம் வந்து கலவை இயந்திரம் இயங்கியதில், அங்கு பணியிலிருந்த சந்தோஷ்குமார் தாஸ், கலவை இயந்திரத்திற்குள் தவறி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X