கிரானைட் தொழிற்சாலை கழிவுகளுக்கு தீ வைப்பு

Added : ஜன 23, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, பி.கே.பெத்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஜீனூர் பிரிவு சாலை அருகே அப்பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுற்றுவட்டார பகுதிகளான பி.கே.பெத்தனப்பள்ளி, ஜீனூர், குருபரப்பள்ளி வரை புகை பரவியது. தகவலின்படி கிருஷ்ணகிரி தீயணைப்புத்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, பி.கே.பெத்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஜீனூர் பிரிவு சாலை அருகே அப்பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலைகளின் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுற்றுவட்டார பகுதிகளான பி.கே.பெத்தனப்பள்ளி, ஜீனூர், குருபரப்பள்ளி வரை புகை பரவியது. தகவலின்படி கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தாசில்தார் சரவணன், ஆர்.ஐ., ராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள கிரானைட் தொழிற்சாலைகளில் விசாரணை நடத்தினர். மேலும் கிரானைட் கழிவுகளை கொட்டியது குறித்தும், மர்மநபர்கள் தீ வைத்தது குறித்தும் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X