ஓசூர்: கெலமங்கலம் அருகே, கூலித்தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற, அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு உட்பட்ட கூட்டூரை சேர்ந்தவர் பழனி, 26; கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், நேற்று பழனியை தேடினர். அப்போது, கூட்டூர் காலனிக்கு சொந்தமான மயானத்தில், தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் படுகாயத்துடன் இறந்து கிடந்தார். அவரது சடலம் அருகே, பெரிய கல் ஒன்று ரத்தக்கரையுடன் கிடந்தது. கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பழனியின் தந்தை அர்ஜூனப்பா புகார்படி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமி, 19, டிராக்டர் டிரைவர் விஜய், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் கூறியதாவது; பழனி மற்றும் அவரது நண்பர்களான சாமி, 19, விஜய், 23, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதையிலிருந்த பழனி, விளையாட்டாக குச்சியால் நண்பர் விஜயை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமி, அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து பழனி தலையில் போட்டார். அதன் பின் விஜய், அதே கல்லை எடுத்து நெஞ்சு பகுதியில் போட்டு பழனியை கொன்றார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE