1,330 திருக்குறளை ஒப்புவித்த மாணவியருக்கு பாராட்டு

Added : ஜன 23, 2022
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பங்கேற்று, 2019-20ம் ஆண்டில் திருக்குறளின், 1,330 குறட்பாக்களை ஒப்புவித்த காவேரிப்பட்டணம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வித்யாலயா பள்ளியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியர் பிரேமிகா, கவுசல்யா, வர்ஷினி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு நாள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பங்கேற்று, 2019-20ம் ஆண்டில் திருக்குறளின், 1,330 குறட்பாக்களை ஒப்புவித்த காவேரிப்பட்டணம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வித்யாலயா பள்ளியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியர் பிரேமிகா, கவுசல்யா, வர்ஷினி ஆகியோருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இரண்டாம் நாள் நடந்த பயிலரங்கில், விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சத்தியபிரியா, ஆட்சிமொழி செயலாக்கம் அரசாணைகள் என்ற தலைப்பிலும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சிவகாமி, மொழிப்பயிற்சி கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X