கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 4 கோடியே, 11 லட்சத்து, 45 ஆயிரம் மதிப்பல் நடந்து வரும் கிராம சாலை பணிகள், அங்கன்வாடி, மகளிர் சுய உதவிக்குழு கட்டட கட்டுமான பணிகள், மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். சின்னகொத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கானாற்றில் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடப்பதை பார்வையிட்டு, பணியாளர்கள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். இதேபோல் சென்னசந்திரம் ஊராட்சியில், 10.19 லட்ச ரூபாய் மதிப்பில் நடந்து அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகள், நேரலகிரி ஊராட்சி கொத்தகிருஷ்ணப்பள்ளியில், 9.88 லட்ச ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பெரிய பண்ணை குட்டை கட்டுமான பணிகள், நாச்சிக்குப்பம் கிராமத்தில், 70.75 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டட வளாக கட்டுமான பணிகள் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, பி.டி.ஓ.,க்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE