ரூ.8.46 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: காணொலியில் திறந்து வைத்த முதல்வர்

Added : ஜன 23, 2022 | |
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உலகம் பஞ்., ராமாபுரத்தில், ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள, 28 கிராம மக்கள் பயனடையும் வகையில், 8.46 கோடி ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உலகம் பஞ்., ராமாபுரத்தில், ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள, 28 கிராம மக்கள் பயனடையும் வகையில், 8.46 கோடி ரூபாய் மதிப்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நீரேற்று பணிகளை பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கூட்டு குடிநீர் திட்டம், 85 சதவீதம் நபார்டு வங்கி கடனுதவி மற்றும் 15 சதவீதம் குறைந்தபட்ச தேவை திட்ட நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ஒரு நபருக்கு, 55 லி., வீதம் கணக்கிட்டு குடிநீர் வழங்கப்படும். உலகம் பஞ்., ராமாபுரம் கிராமத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், 6 மீ., விட்டம், 20 மீ., ஆழம் கொண்ட, 2 திறந்தவெளி கிணறுகள் மற்றும் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, பில்லாரி அக்ரஹாரம், கொப்பக்கரை, மேடு அக்ரஹாரம், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும். அதன் மூலம், 28 குக்கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X