ஆர்.ஐ.,க்களுக்கு நிலஅளவை பயிற்சி; நாமக்கல் மாவட்டத்தில் துவக்கம்

Added : ஜன 23, 2022
Advertisement
நாமக்கல்: வருவாய்த்துறையில் பணியாற்றி வரும் ஆய்வாளர்களுக்கு, ஒரத்தநாட்டில், நிலஅளவை பயிற்சி, 60 நாள் வழங்கப்படும். தற்போது, தமிழகத்தில், கொரோனா தொற்று பரவதலை அடுத்து, அந்தந்த மாவட்டங்களிலேயே நில அளவை பயிற்சி அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நிலஅளவை பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர்

நாமக்கல்: வருவாய்த்துறையில் பணியாற்றி வரும் ஆய்வாளர்களுக்கு, ஒரத்தநாட்டில், நிலஅளவை பயிற்சி, 60 நாள் வழங்கப்படும். தற்போது, தமிழகத்தில், கொரோனா தொற்று பரவதலை அடுத்து, அந்தந்த மாவட்டங்களிலேயே நில அளவை பயிற்சி அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நிலஅளவை பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் துவக்கிவைத்தார். முதல் கட்டமாக, 12 வருவாய் ஆய்வாளர்களுக்கு, நிலஅளவை பயிற்சி துவங்கி உள்ளது. மாவட்ட உதவி இயக்குனர் (நிலஅளவைத்துறை) சிவகுமார், கோட்ட ஆய்வாளர் ஆர்.சிவகுமார், வட்ட துணை ஆய்வாளர் பூங்குன்றன், சார் ஆய்வாளர்கள் இளங்கோவன், இந்துமதி ஆகியோர், ஆர்.ஐ.,க்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில், நிலஅளவை மட்டும் இன்றி, கணினி பற்றிய பயிற்சி, வரைபடம் வரைதல், இடங்களை கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள், தொடர்ந்து, 28 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X