பூசாரியை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Added : ஜன 23, 2022
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவில் பூசாரியை மாற்றக்கோரி, கிராம மக்கள் கோவில் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில், 100 ஆண்டு பழமையான பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பாரம்பரியமாக பூஜை செய்து வந்தவர் இறந்ததால், அவரது மருமகன் அய்யனார்,45, தற்காலிக பூசாரியாக இருந்து வருகிறார். ஊர் மக்கள் அம்மனுக்கு வேண்டுதல் காணிக்கையாக

ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோவில் பூசாரியை மாற்றக்கோரி, கிராம மக்கள் கோவில் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில், 100 ஆண்டு பழமையான பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பாரம்பரியமாக பூஜை செய்து வந்தவர் இறந்ததால், அவரது மருமகன் அய்யனார்,45, தற்காலிக பூசாரியாக இருந்து வருகிறார். ஊர் மக்கள் அம்மனுக்கு வேண்டுதல் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள், தங்கத் தாலி, வெள்ளிக்காசு உண்டியலில் செலுத்தும் எடைக்கு எடை காணிக்கை ஆகியவற்றை அய்யனார் கணக்கு காட்டவில்லை. ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்ரகாளியம்மன் கோவில் பூசாரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ராசிபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் மக்களிடம் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிட செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X