இந்திய அணிக்கு 288 ரன் இலக்கு

Updated : ஜன 23, 2022 | Added : ஜன 23, 2022
Advertisement
கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 288 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இந்திய அணியில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 288 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 0-2 என, ஏற்கனவே தொடரை இழந்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இந்திய அணியில் அஷ்வின், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், தீபக் சகார், பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news




தென் ஆப்ரிக்க அணிக்கு ஜன்னேமன் மலான் (1), கேப்டன் பவுமா (8) ஏமாற்றினர். மார்க்ரம் (15) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய குயின்டன் டி காக் (124) சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த வான் டெர் துசென் (52) அரைசதம் அடித்தார். டேவிட் மில்லர் (39) ஓரளவு கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 49.5 ஓவரில் 287 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, தீபக் சகார், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X