வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை

Added : ஜன 23, 2022 | |
Advertisement
பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு, அவர்களது இடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது,'' என, மருத்துவ அலுவலர் ரேவதி தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: பள்ளிபாளையம் வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 126 பேர் வீட்டு

பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளவர்களுக்கு, அவர்களது இடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது,'' என, மருத்துவ அலுவலர் ரேவதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பள்ளிபாளையம் வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 126 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்களை தினமும் கண்காணிக்க, சுகாதார ஆய்வாளர்கள், பணியார்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுவினர் சமந்தப்பட்டவர்கள் வீட்டிற்கு தினமும் சென்று, ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பநிலை, அவர்களின் உடல்நிலை போன்றவை பரிசோதனை செய்கின்றனர். அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு பகுதியில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால், அது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, காய்ச்சல், சளி இருந்தால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பரிசோதனையும் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X