நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை நடந்த, 18 மாபெரும் தடுப்பூசி முகாமில், ஆறு லட்சத்து, 99 ஆயிரத்து, 772 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல், நேற்று, 19ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பகுதிகளில் உள்ள, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 456 நிலையான முகாம்கள், 34 நடமாடும் குழுக்கள் என, மொத்தம், 490 முகாம்களில், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, கொரோனா 'மெகா தடுப்பூசி முகாம்' நடந்தது. அதில், மாவட்டம் முழுவதும் மொத்தம், 13 ஆயிரத்து, 449 பேர், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இம்முகாம் பணிகளில், 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள், 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE