சரக்கு அடிக்க பணம் தராததால் தொழிலாளியை கொலை செய்த வாலிபர் மருத்துவமனையில் 'அட்மிட்'

Added : ஜன 23, 2022
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லூர் மணியனூரை சேர்ந்தவர் கணேசன், 35. அவர், ரிக் வண்டியில், டிரில்லராக பணியாற்றி வந்தார். உலகபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 32; மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மணியனூரில் உள்ள அன்னமார் கோவில் அருகில், கணேசன் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சரவணன், கணேசனிடம், சரக்கு அடிக்க

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நல்லூர் மணியனூரை சேர்ந்தவர் கணேசன், 35. அவர், ரிக் வண்டியில், டிரில்லராக பணியாற்றி வந்தார். உலகபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 32; மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மணியனூரில் உள்ள அன்னமார் கோவில் அருகில், கணேசன் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சரவணன், கணேசனிடம், சரக்கு அடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தரமறுத்ததால், ஆத்திரம் அடைந்த சரவணன், அங்கு கிடந்த கல், கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினார். கணேசனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர். அதற்குள், சரவணன் அங்கிருந்து தப்பி ஓடினார். கணேசனை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், தப்பிய ஓடிய சரவணன், தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக, நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், இதுவரை சரவணனை போலீசார் கைது செய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X