இந்தியர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி: மோடி

Updated : ஜன 24, 2022 | Added : ஜன 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: இந்தியர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி என நேதாஜியின் 125 பிறந்தாளில் அவருக்கு புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி .நேதாஜியின் 125 வது பிறந்தநாளையொட்டி அவரது முப்பரிமாண லேசர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என ஏற்கனவே பிரதமர் அறிவித்து இருந்தார். புதிய சிலை அமைக்கப்படும் வரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தவர் நேதாஜி என நேதாஜியின் 125 பிறந்தாளில் அவருக்கு புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி .



latest tamil news



நேதாஜியின் 125 வது பிறந்தநாளையொட்டி அவரது முப்பரிமாண லேசர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.நேதாஜிக்கு கிரானைட்டால் ஆன பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என ஏற்கனவே பிரதமர் அறிவித்து இருந்தார். புதிய சிலை அமைக்கப்படும் வரை லேசர் முறையில் முப்பரிமாண நேதாஜி சிலை இந்தியா கேட்டில் ஒளிரும்.


latest tamil news



இந்தியர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்களிப்பை தந்தவர் நேதாஜி கடுமையான சோதனைகளை சந்தித்த போதும் ஆங்கிலேய அரசுக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி.
வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் வரலாற்று சிறப்பானநிகழ்வு அரங்கேறி உள்ளது. சுதந்திர போராட்டத்தில் தேச மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் நேதாஜி.
சுதந்திர இந்தியா கனவில் நம்பிக்கை இழக்காதீர்கள், இந்தியாவை அசைக்கக்கூடிய சக்தி உலகில் இல்லை" என்று நேதாஜி கூறுவார். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆவதற்குள், 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளோம் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


latest tamil news



தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் இது வெறும் கிரானைட் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் கொடுத்த நேதாஜிக்கு உரிய அஞ்சலி என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜன-202208:45:32 IST Report Abuse
பேசும் தமிழன் உண்மையான் கான் கிராஸ்... நேதாஜி விலகிய போதே செத்து விட்டது... பிறகு நேரு முதற்கொண்டு.. உருட்டியது எல்லாம்.... பாகிஸ்தான் மற்றும் ஆங்கிலேய ஆதரவு கான் கிராஸ்
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
23-ஜன-202222:30:52 IST Report Abuse
Subramaniyam Veeranathan அப்போது நாட்டுக்கு ஒரு நேதாஜி இப்போது நம் நாட்டுக்கு மோடிஜி. தற்போதைய பிற அரசியல்வாதிகள் எல்லாம் வெறும் பெருக்குமட்டுமே நேதாஜி.........
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜன-202220:35:43 IST Report Abuse
Nagarajan D தேசபற்றுள்ளவர் தேசப்பற்றாளரை புகழ்கிறார்..நேதாஜி அவர்களை கவ்ரவ படுத்த நமது ரூபாய் நோட்டுகளில் அவர் படத்தை அச்சடிக்கவேண்டும் என்பதே தேசபற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பு... அவரது 125 பிறந்த ஆண்டில் அவரை சிறப்பிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X