வாகனம் மூலம், வன விலங்குகளுக்கு குடிநீர் வினியோகம்

Added : ஜன 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஊட்டி:முதுமலையில், வறட்சியான பகுதிகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வாகனம் மூலம் வனத்துறையினர் குடிநீர் சப்ளை செய்ய துவங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் துவங்கி உள்ளது. வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை பாதிப்பு இல்லை என்றாலும், வறட்சியான சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை

ஊட்டி:முதுமலையில், வறட்சியான பகுதிகளில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வாகனம் மூலம் வனத்துறையினர் குடிநீர் சப்ளை செய்ய துவங்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் துவங்கி உள்ளது. வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை பாதிப்பு இல்லை என்றாலும், வறட்சியான சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில், வசிக்கும் வனவிலங்குகள் குடிநீருக்கு தேடி இடம் பெயரும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை தடுக்க, வறட்சியான பகுதிகள் கண்டறிந்து அப்பகுதியில் வனத்துறையினர், வாகனங்களின் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணியை, முதல் கட்டமாக தெப்பக்காடு வனச்சரகத்தில் துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202206:29:58 IST Report Abuse
Mani . V இயற்கை வளங்களை, வனங்களை அழித்து விட்டு வாகனம் மூலம், வன விலங்குகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஒரே நாடு நம்ம நாடுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X